Homeசெய்திகள்சினிமாதிருமணக் கோலத்தில் நடிகர் ஜெய்... புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி...

திருமணக் கோலத்தில் நடிகர் ஜெய்… புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…

-

- Advertisement -
திருமணக் கோலத்தில் இருக்கும் நடிகர் ஜெய்யின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் 40 வயதைக் கடந்தும், இளம் நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெய். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான தீராக் காதல் திரைப்படம் மற்றும் லேபிள் என்ற தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. லேபிள் தொடரில், ஜெய் ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக தன்யா ஹோப் நாயகியாகவும் நடித்திருந்தனர். மேலும் மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முத்தமிழ் படைப்பகம் தயாரிக்கும் இந்தத் தொடருக்கு சாம் சி.எஸ் இசை அமைத்திருக்கிறார்.

இந்த தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் பிரதாப் இயக்கத்தில் ஜெய் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பேபி அன்ட் பேபி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில், சத்யராஜ், யோகிபாபு, உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பேபி மற்றும் பேபி திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், திருமணக் கோலத்தில் ஜெய் மற்றும் படத்தின் கதாநாயகியாக நடிக்கும் பிரக்யா நாக்ராவின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இத்திரைப்படத்தின் முதல் தோற்றம் மற்றும் டீசர் விரைவில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

MUST READ