Homeசெய்திகள்சினிமாநடிகர் ஜனகராஜ் நடிக்கும் 'தாத்தா'...... இனிமே எப்போ வேணா பாக்கலாம்!

நடிகர் ஜனகராஜ் நடிக்கும் ‘தாத்தா’…… இனிமே எப்போ வேணா பாக்கலாம்!

-

- Advertisement -

நடிகர் ஜனகராஜ் நடித்துள்ள தாத்தா எனும் குறும்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.நடிகர் ஜனகராஜ் நடிக்கும் 'தாத்தா'...... இனிமே எப்போ வேணா பாக்கலாம்!

நடிகர் ஜனகராஜ் கடந்த 1970- 80 காலகட்டங்களில் இருந்தே தன்னுடைய திரை பயணத்தை தொடங்கியவர். கிட்டத்தட்ட 100 படங்களுக்கும் மேலாக நடித்து பெயர் பெற்றவர். குறிப்பாக இவர் நகைச்சுவை ஜாம்பவானாக திகழ்ந்தவர். பல படங்களில் இவர் பேசி இருக்கும் நகைச்சுவையான வசனங்கள் இன்றுவரையிலும் யாராலும் மறக்க முடியாது. சினிமாவில் கவுண்டமணி, செந்தில் ஆகியோருக்கு இணையான இடத்தை பிடித்தவர். இவர் ரஜினி, கமல், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். இவர் கடைசியாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து தற்போது தாத்தா என்று குறும்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த குறும்படத்தை பாலாஜி தரணிதரன், சுதா கொங்கரா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த நரேஷ் என்பவர் இயக்கியுள்ளார்.நடிகர் ஜனகராஜ் நடிக்கும் 'தாத்தா'...... இனிமே எப்போ வேணா பாக்கலாம்! இதனை இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் எஸ் கவிதா தயாரித்திருக்கிறார். ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைக்க வினோத் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த குறும்படமானது தாத்தா – பேரன் இருவருக்கும் இடையேயான உறவை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த குறும்படம் ஷார்ட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

MUST READ