Homeசெய்திகள்சினிமாகள்ளக்குறிச்சி அருகே சாலை விபத்தில் சிக்கினார் நடிகர் ஜீவா

கள்ளக்குறிச்சி அருகே சாலை விபத்தில் சிக்கினார் நடிகர் ஜீவா

-

- Advertisement -

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் அருகே நடிகர் ஜீவா சென்ற கார் சாலையோர தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. தமிழ் திரைப்பட நடிகர் ஜீவா மற்றும் அவரது மனைவியுடன் கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னைக்கு திருப்பியபோது சின்னசேலம் அருகே காரில் சென்று கொண்டிருந்தார்.

கள்ளக்குறிச்சி அருகே சாலை விபத்தில் சிக்கினார் நடிகர் ஜீவாஅப்போது, அவர் கார் வந்த திசையில் சாலையை கடப்பதற்காக இருசக்கர வாகனம் ஒன்று குறுக்கே வந்தது. இதனால், இருசக்கர வாகனம் மீது மோதிவிடக் கூடாது என்பதற்காக ஜீவா காரை திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவில் இருந்த தடுப்பு மீது பயங்கரமாக மோதியது.

கள்ளக்குறிச்சி அருகே சாலை விபத்தில் சிக்கினார் நடிகர் ஜீவாஇந்த விபத்தில் காரின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக நடிகர் ஜீவா மற்றும் அவரது மனைவியும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும், பரபரப்பும் ஏற்பட்டது. இதையடுத்து மாற்று கார் மூலமாக நடிகர் ஜீவா மற்றும் அவரது மனைவி சேலத்திற்கு சென்றனர்.

இந்த விபத்து தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த சின்னசேலம் போலீசார் விபத்தில் சிக்கிய காரை பறிமுதல் செய்து, விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ