Homeசெய்திகள்சினிமாவிஜயின் அந்த சூப்பர் ஹிட் படத்தில் சூர்யா தான் நடிக்க இருந்தார்..... நடிகர் ஜீவா!

விஜயின் அந்த சூப்பர் ஹிட் படத்தில் சூர்யா தான் நடிக்க இருந்தார்….. நடிகர் ஜீவா!

-

- Advertisement -

நடிகர் ஜீவா தமிழ் சினிமாவில் வலம் வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். விஜயின் அந்த சூப்பர் ஹிட் படத்தில் சூர்யா தான் நடிக்க இருந்தார்..... நடிகர் ஜீவா!இவரது நடிப்பில் கடந்த ஆண்டு பிளாக் திரைப்படம் வெளியானது. அதைத்தொடர்ந்து அகத்தியர் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் ஜீவா. இந்த படம் வருகின்ற பிப்ரவரி 28ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது நடிகர் ஜீவா, விஜயின் நண்பன் படம் குறித்து பேசியுள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், இலியானா ஆகியோரின் நடிப்பில் நண்பன் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கியிருந்தார். விஜயின் அந்த சூப்பர் ஹிட் படத்தில் சூர்யா தான் நடிக்க இருந்தார்..... நடிகர் ஜீவா!இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்நிலையில் நடிகர் ஜீவா, “இந்த படத்தில் முதலில் விஜய் நடிக்க வந்த பிறகு ஒரு சில காரணங்களால் அவர் இந்த படத்தில் இருந்து வெளியேறினார்.

பின்னர் நண்பன் படத்தில் சூர்யாவை நடிக்க வைக்க திட்டமிடப்பட்டது. அதே சமயம் மகேஷ் பாபுவை நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த மாதிரி நண்பன் படத்தில் சில குழப்பங்கள் இருந்தது. ஆனால் அதன் பிறகு விஜயே மீண்டும் வந்துவிட்டார்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ