நடிகர் கமல்ஹாசன், ஜாகிர் உசேன் மறைவிற்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
உலக அளவில் புகழ்பெற்றவர் தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன். இந்துஸ்தானி இசை கலைஞரான இவர் கம்போசர், பெர்குசனிஸ்ட், நடிகர் என பல பரிமாணங்களில் வலம் வந்தவர். அதே சமயம் பத்மஸ்ரீ, பத்மபூஷன், கிராமி விருது ஆகிய விருதுகள் இவரால் பெருமை அடைந்தன. இவர் ஏராளமான இசை ஆல்பங்களை வெளியிட்டிருக்கிறார். இவருக்கு உலக அளவில் பல ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் தான் ஜாகிர் உசேன் (வயது 73) உடல் நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் ஐசியு -வில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதயம் தொடர்பான பிரச்சனையால் இவருக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வந்தது. மேலும் ரசிகர்களும் அவர் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்து வந்தனர். இருப்பினும் இவர் சிகிச்சை பலனின்றி நேற்று (டிசம்பர் 16) உயிரிழந்தார். இந்நிலையில் நடிகரும் அரசியல்வாதிகமான கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் ஜாகிர் உசேன் குறித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
Zakir Bhai ! He left too soon. Yet we are grateful for the times he gave us and what he left behind in the form of his art.
Goodbye and Thank you.#ZakirHussain pic.twitter.com/ln1cmID5LV— Kamal Haasan (@ikamalhaasan) December 16, 2024
அந்த பதிவில், “ஜாகீர் பாய் சீக்கிரமாக நம்மை விட்டு பிரிந்து விட்டார். ஆனாலும் அவர் நமக்கு கொடுத்த காலங்களுக்காகவும் அவருடைய கலையின் வடிவத்தில் அவர் விட்டுச் சென்றதற்காகவும் நாங்கள் நன்றி உள்ளவர்களாக இருப்போம். குட் பை நன்றி” என்று குறிப்பிட்டு ஜாகிர் உசேன் உடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றிணையும் வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன்.