Homeசெய்திகள்சினிமாகார்த்தி நடிக்கும் 30-வது திரைப்படம்... டாணாக்காரன் இயக்குநருடன் கூட்டணி...

கார்த்தி நடிக்கும் 30-வது திரைப்படம்… டாணாக்காரன் இயக்குநருடன் கூட்டணி…

-

கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. காதல், கமர்ஷியல், ஆக்‌ஷன் மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த திரைப்படங்களில் கார்த்தி நடித்திருக்கிறார். பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் ஆகிய திரைப்படங்களின் வெற்றிக்கு பிறகு தனது 25 வது படமான ஜப்பான் திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. ராஜூமுருகன் படத்தை இயக்கியிருந்தார். இப்படம் அதிகளவில் வரவேற்பை பெறவில்லை.
கார்த்தி நடிக்கும் 26-வது திரைப்படம் வா வாத்தியாரே. இத்திரைப்படத்தை நலன் குமாரசாமி இயக்குகிறார். அதேபோல, கார்த்தியின் 27 வது படத்தை ’96’படத்தை இயக்கிய பிரேம் குமார் இயக்கி இருக்கிறார். மெய்யழகன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார்.
இந்நிலையில், கார்த்தியின் 30-வது திரைப்படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, டாணாக்காரன் திரைப்படத்தை இயக்கி புகழ்பெற்ற தமிழ், கார்த்தியை இயக்குகிறார். 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. 1960-களில் நடக்கும் கேங்ஸ்டர் கதையை மையப்படுத்தி இத்திரைப்படம் உருவாகிறது என்றும், படப்பிடிப்புக்கான பணிகள் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

MUST READ