Homeசெய்திகள்சினிமாஅஜித்துடன் நடிகர் கவின்.... வைரலாகும் புகைப்படங்கள்!

அஜித்துடன் நடிகர் கவின்…. வைரலாகும் புகைப்படங்கள்!

-

- Advertisement -

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.அஜித்துடன் நடிகர் கவின்.... வைரலாகும் புகைப்படங்கள்! அதைத்தொடர்ந்து குட் பேட் அக்லி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத், ஸ்பெயின் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு படம் வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் நடிகர் கவின் கடைசியாக ஸ்டார் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து மாஸ்க், கிஸ் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அந்த வகையில் இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் பிளடி பெக்கர் எனும் திரைப்படம் 2024 தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. மேலும் நயன்தாராவுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார் கவின்

.

இந்நிலையில் தல அஜித்தை நேரில் சந்தித்துள்ளார் நடிகர் கவின். இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதனை நடிகர் கவின் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவர்களுடன் தயாரிப்பாளர் நெல்சனும் அந்த புகைப்படத்தில் இருக்கிறார். மேலும் நடிகர் கவின் தான் அஜித்தின் தீவிர ரசிகன் என ஏற்கனவே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ