Homeசெய்திகள்சினிமாகவினின் ப்லெடி பெக்கர்... வெளியீட்டு தேதி அறிவிப்பு...

கவினின் ப்லெடி பெக்கர்… வெளியீட்டு தேதி அறிவிப்பு…

-

கவின் நடிக்கும் ப்லெடி பெக்கர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
 கோலிவுட் திரையுலகில் கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, முதல் படத்திலேயே முத்திரை பதித்து முன்னணி இயக்குநராக உயர்ந்தவர் நெல்சன் திலீப்குமார். அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் திரைப்படத்தை இயக்கினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளிியாகிய டாக்டர் திரைப்படம் அதிரி புதிரி ஹிட் அடித்தது. டாக்டர் படத்திற்கு கிடைத்த வெற்றி விஜய் படத்தை இயக்க வித்திட்டது. அதன்படி, விஜய்யை வைத்து பீஸ்ட் திரைப்படத்தை இயக்கினார். அடுத்து ரஜினியை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கி அதில் வெற்றியும் கண்டார்

தற்போது ஜெயிலர் இரண்டாம் பாகத்தை இயக்கும் பணியில் நெல்சன் ஈடுபட்டுள்ளார். இதனிடையே, இயக்குநர் நெல்சன் அண்மையில் தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கினார். பிலமெண்ட் பிக்சர்ஸ் என இந்நிறுவனத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டது. இந்நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தில் கவின் நாயகனாக நடிக்கிறார். படத்திற்கு ப்லெடி பெக்கர் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

சிவபாலன் முத்துக்குமார் இத்திரைப்படத்தை இயக்குகிறார். ஜென் மார்ட்டின் படத்திற்கு இசை அமைக்கிறார். இத்திரைப்படத்தின் டைட்டில் டீசர் அண்மையில் வெளியானது. இந்நிலையில், இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி வெளியாக இருக்கிறது. விரைவில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ