மாமன்னன் படத்தில் மலையாள நடிகர் லாலும் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், ‘மாமன்னன்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பகத் பாசில், நடிகர் வடிவேலு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். தற்போது படத்தின் இசையமைக்கும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தப் படத்தில் வடிவேலு மிகவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுவரை அவர் நடித்த படங்களைப் போல் அல்லாமல் இந்த படத்தில் மிகவும் வித்தியாசமான தோற்றத்திலும் வலுவான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். எனவே படத்திற்கு எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் மலையாள நடிகர் லால் இந்தப் படத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘கர்ணன்’ படத்திலும் லால், ஏமன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இரண்டாவது முறையாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் அவர் நடித்துள்ளார்.
சமீபத்தில் படத்திலிருந்து வெளியான வடிவேலலுவின் புகைப்படத்தில் அவர் கைகளில் லாலுவின் டாட்டூ இருப்பதைக் காணமுடிகிறது. எனவே அவரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.