Homeசெய்திகள்சினிமாமம்மூட்டி - ஜீவா கூட்டணியில் யாத்ரா 2... முன்னோட்டம் வெளியீடு...

மம்மூட்டி – ஜீவா கூட்டணியில் யாத்ரா 2… முன்னோட்டம் வெளியீடு…

-

மம்மூட்டி மற்றும் ஜீவா நடிப்பில் உருவாகியிருக்கும் யாத்ரா 2 திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி உள்ளது.

கிரிக்கெட் நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், மறைந்த நடிகர்கள் உள்ளிட்டோரின் வாழ்க்கை வரலாறு தற்போது திரைப்படங்களாக எடுக்கப்பட்டு வருகின்றன. இத்திரைப்படங்கள் பான் இந்தியா படமாக வெளியாகின்றன. அந்த வகையில், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு தற்போது திரைப்படமாக உருவாகியுள்ளது. தெலுங்கு மொழியில் இத்திரைப்படத்தை எடுத்துள்ளனர். இதற்கு முன்பாக ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தையும், மறைந்த ஆந்திர முதல்வருமான ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளியானது. யாத்ரா என்ற தலைப்பில் கடந்த 2019-ம் ஆண்டு இப்படம் வெளியானது. இதில் மம்மூட்டி நடித்திருந்தார்.

தற்போது ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகி இருக்கிறது. இத்திரைப்படத்தை மஹி வி ராகவ் இயக்கியிருக்கிறார். இதில், ஜெகன் மோகன் ரெட்டியாக பிரபல தமிழ் நடிகர் ஜீவா நடிக்கிறார். முந்தைய பாகத்தில் ஒய்.எஸ்.ஆர் கதாபாத்திரத்தில் நடித்த மம்மூட்டி இந்த பாகத்திலும் நடித்துள்ளார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ம் தேதி திரையரங்குகளில் வௌியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இத்திரைப்படத்தின் முன்னோட்டம் சமூக வலைதளங்களில் வௌியாகி இருக்கிறது. அரசியல் வசனங்களுடன் தீயாக எரியும் ஜீவாவின் நடிப்பை பலரும் பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர். இத்திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

MUST READ