Homeசெய்திகள்சினிமா‘நக்கலைட்ஸ்’ இயக்குநருடன் கைகோர்த்த நடிகர் மணிகண்டன்.. தொடங்கிய படப்பிடிப்பு!

‘நக்கலைட்ஸ்’ இயக்குநருடன் கைகோர்த்த நடிகர் மணிகண்டன்.. தொடங்கிய படப்பிடிப்பு!

-

- Advertisement -
பிரபல நடிகர் மணிகண்டன் நடிக்கும் புதிய படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் மணிகண்டன். அதன் பின் இவர் ஹீரோவாக நடித்த குட் நைட் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு லவ்வர் என்ற படத்தில் நடித்தார். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் பிரபு ராம் வியாஸ் இயக்குகிறார். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் எம்ஆர்பி என்டர்டைன்மென்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. இதற்கு இசையமைக்கிறார். இந்த புதிய படத்தில் மணிகண்டன் உடன் இணைந்து கௌரி பிரியா ரெட்டி, கண்ணன் ரவி மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது அவர் அடுத்து ஹீரோவாக நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. நக்கலைட்ஸ் புகழ் ராஜேஷ்வர் காளிசாமி இப்படத்தை இயக்குகிறார். சினிமாகாரன் எஸ்.வினோத்குமார் தயாரிக்கும் இந்தப் படத்தின் கதையை பிரசன்னா பாலசந்திரனும் ராஜேஷ்வர் காளிசாமியும் இணைந்து எழுதி இருக்கின்றனர். திரைக்கதை, வசனத்தை பிரசன்னா எழுதியுள்ளார். படத்திற்கு சுஜித் சுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.

படத்திற்கு வைஷாக் இசை அமைக்கிறார். சான்வி மேக்னா நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். குரு சோமசுந்தரம், ஆர்.சுந்தர்ராஜன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

MUST READ