நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி
- Advertisement -
பிரபல நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகர்களில் மிகவும் மிரட்டக்கூடிய முகமும், தோரணையும், நடிப்பும் கொண்டவர்களில் ஒருவர் மன்சூர் அலிகான். 1990-களில் தொடங்கி இன்று வரை அவர் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் அவர் நடித்துள்ளார். அண்மையில் அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் தான் லியோ. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருப்பார். மேலும், திரைப்படத்தின் நிகச்சியில் பேசிய மன்சூர் அலிகான், த்ரிஷா குறித்து கொச்சையாக பேசியதால் பெரும் சர்ச்சை எழுந்தது.

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக வழக்கும் பதியப்பட்டு விசாரணை நடைபெற்றது. இறுதியாக நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டார். தொடர்ந்து பல படங்களிலும் இவர் நடித்து வருகிறார். இதனிடையே, வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தலை முன்னிட்டு, நடிகர் மன்சூர் அலிகான் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். குடியாத்தம் பகுதியில் அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

அப்போது, மன்சூர் அலிகானுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் குடியாத்தத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் நடிகர் மன்சூர் அலிகானை சென்னை அனுப்பி வைத்தனர்.