Homeசெய்திகள்சினிமாபுதிய சொகுசு கார் வாங்கிய நாக சைதன்யா... இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்....

புதிய சொகுசு கார் வாங்கிய நாக சைதன்யா… இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்….

-

பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மூத்த மகன் தான் நாக சைதன்யா. இவர் ஐதராபாத்தில் பிறந்தாலும், தனது கல்லூரி பருவம் வரை தனது இளமைக்காலத்தை சென்னையில் செலவிட்டவர் ஆவார். நடிகர் நாக சைதன்யா கடந்த 2009-ம் ஆண்டு வெளியான ஜோஷ் திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகமானார். இதையடுத்து தொடர்ந்து பல கமர்ஷியல் திரைப்படங்களில் நடித்து வந்தார். பெரும்பாலான படங்களில் தனது தந்தை நாகர்ஜூனாவுடன் இணைந்து நடித்திருக்கிறார்.

இதனிடையே, நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும் காதலித்து கடந்த 2017 இல் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், 5 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பின்னர், கடந்த 2021-ம் ஆண்டு இருவரும் பிரிவதாக விவாகரத்தை அறிவித்தனர். இதைத் தொடர்ந்து சமந்தாவை பல சர்ச்சைகள் வட்டமடிக்கத் தொடங்கின. தற்போது இருவரும் பிசியாக நடித்து வருகின்றனர். அண்மையில் வெங்கட் பிரபு இயக்கிய கஸ்டடி படத்தில் நாக சைதன்யா நடித்திருந்தார்.

நடிகர் நாக சைதன்யா கார்கள் மீது அதிகளவிலான ஆர்வம் கொண்டார். கார்கள் தான் தனது முதல் காதலி என்றும் பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், போர்ஸ்ர் சி 911 ஜிடி3 ஆர்எர் ஸ் என்ற புதிய சொகுசு காரை வாங்கியிருக்கிறார். இந்தியாவில் இந்த காரின் விலை சுமார் 3 கோடி ரூபாய் ஆகும். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன

MUST READ