நடிகர் நரேன், தளபதி 69 படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.
நடிகர் விஜய் தற்போது தனது 69 ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தளபதி 69 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க ஹெச். வினோத் படத்தை இயக்குகிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க சத்யன் சூரியன் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரியாமணி, மமிதா பைஜூ, பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஏற்கனவே வெளியான நிலையில் அதை தொடர்ந்து படப்பிடிப்புகளும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் இந்த படமானது அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம் வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதி புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தளபதி 69 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் டைட்டிலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகர் நரேன் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவரிடம் தளபதி 69 படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நரேன், “விஜயுடன் நடிப்பது இதுதான் முதல் முறை. அவருடனான காம்பினேஷன் காட்சிகளில் இதுவரை நடிக்கவில்லை. இன்னும் சில வாரங்களில் தளபதி 69 படத்தின் அப்டேட் வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார்.