Homeசெய்திகள்சினிமாதனுஷ் பட நடிகர் புற்றுநோயால் மரணம்

தனுஷ் பட நடிகர் புற்றுநோயால் மரணம்

-

தனுஷ் பட நடிகர் புற்றுநோயால் மரணம்

தமிழ் திரைப்பட துணை நடிகர் பிரபு புற்றுநோயால் காலமானார்.

தமிழ் திரைப்பட துணை நடிகர் பிரபு புற்றுநோயால் காலமானார் - ரசிகர்கள் அதிர்ச்சி

பாண்டிச்சேரியை சேர்ந்தவர் தமிழ் திரைப்பட துணை நடிகர் பிரபு. இவர் நடிகர் தனுஷுன் படிக்காதவன், அஜித்தின் ஜீ, விஜயின் வசீகரா உள்ளிட்ட பல்வேறு படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அதரவற்று இருந்துள்ளார். இவரை அடையாளம் கண்டு அவருக்கான உதவிகளை செய்ய இசையமைப்பாளர் டி.இமான் முன்வந்துள்ளார் .

குடும்பம் இன்றி ஆதரவற்ற நிலையில் இருந்த அவருக்கு 4 ஆம் நிலை புற்றுநோய் இருந்தது தெரியவந்துள்ளது. உடனே இதற்கான சிகிச்சைகளை தன்னுடைய டி. இமான் எஜுகேஷனல் டிரஸ்ட் மூலம் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா தனியார் மருத்துவமனையில் அவருக்கு புற்று நோய்க்கான சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவ உதவிகளை செய்து வந்துள்ளார் டி. இமான்.

இந்நிலையில், துணை நடிகர் பிரபு சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். ஆதரவற்ற நிலையில் கடந்த ஆறு மாதங்களாக மருத்துவ உதவிகளை செய்த இசையமைப்பாளர் டி இமான் அவருடைய இறுதி சடங்குகளையும் ரெட் ஹில்ஸ் அடுத்துள்ள மாத்தூரில் செய்தார். மருத்துவ உதவிகள் செய்தது மட்டுமல்லாமல் அவரின் இறுதிச்சடங்குகள் வரை செய்து முடித்தது அனைவரது மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது.

MUST READ