Homeசெய்திகள்சினிமாஅதை என்னால் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது.... அஜித் குறித்து பிரசன்னா!

அதை என்னால் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது…. அஜித் குறித்து பிரசன்னா!

-

- Advertisement -

நடிகர் பிரசன்னா, அஜித் குறித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.அதை என்னால் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது.... அஜித் குறித்து பிரசன்னா!

நடிகர் பிரசன்னா தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருபவர். தமிழில் இவர் பைவ் ஸ்டார், சீனா தானா, கண்ணும் கண்ணும் ஆகிய படங்களில் நடித்த ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அடுத்தது அஞ்சாதே, இரு துருவம் 2 ஆகிய படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார். மேலும் சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து பெயர் பெற்றுள்ளார்.அதை என்னால் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது.... அஜித் குறித்து பிரசன்னா! அந்த வகையில் தற்போது இவர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்திலும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படம் இன்று (ஏப்ரல் 10) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் நடிகர் பிரசன்னா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “எனக்கு பிடித்த நடிகருடன் திரையில் தோன்றுவதில் ஏற்பட்ட மகிழ்ச்சியை என்னால் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. உன்னதமான மனிதருடன் செலவழித்த ஒவ்வொரு தருணத்தையும் நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். லவ் யூ அஜித் சார். இதோ ராஜா வருகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ