ஊர்வசி நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் J. பேபி. இந்தப் படத்தை சுரேஷ் மாரி எழுதி இயக்கியுள்ளார். இதில் ஊர்வசியுடன் இணைந்து அட்டகத்தி தினேஷ், மாறன், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் இணைந்து ஜெயமூர்த்தி, கவிதா பாரதி, சேகர் நாராயணன், ஏழுமலை உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தை பா ரஞ்சித் தனது நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்திருக்கிறார். ஜெயந்த் சேது மாதவன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய டோனி பிரிட்டோ இசையமைத்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பாகவே இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து இத்திரைப்படம் வருகின்ற மார்ச் 8 ஆம் மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. எனவே படக்குழுவினர் அடுத்தடுத்த பாடல்களை வெளியிட்டு கவனம் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் பிரசாந்த், J. பேபி படத்தில் சிறப்பு காட்சிகளை பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டியுள்ளார். பிரசாந்த் மற்றும் பா ரஞ்சித் ஆகிய இருவரும் இணைந்துள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் பிரசாந்த் தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.