Homeசெய்திகள்சினிமாஒரு திரைப்படத்திற்காக 5 ஆண்டுகளை அர்ப்பணித்துள்ளேன் - ஆடு ஜீவிதம்

ஒரு திரைப்படத்திற்காக 5 ஆண்டுகளை அர்ப்பணித்துள்ளேன் – ஆடு ஜீவிதம்

-

- Advertisement -
ஒரு திரைப்படத்திற்காக மட்டும் தனது எல்லைகளை தாண்டி சுமார் 5 ஆண்டுகளை அர்ப்பணித்துள்ளதாக நடிகர் பிருத்விராஜ் தெரிவித்துள்ளார்.

மலையாள திரையுலகின் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் பிருத்விராஜ். 90-களில் தொடங்கி இன்றுவரை ஹீரோவாக நடித்து வருகிறார். அதுமட்டுமன்றி தமிழிலும் பிருத்விராஜ் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். அண்மைக் காலமாக அவர் வில்லன் வேடத்தில் நடிக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார். தொடக்கத்தில் மலையாள படத்தில் வில்லன் வேடத்தில் நடித்த பிருத்விராஜ், அடுத்து தெலுங்கு படமான சலார் திரைப்படத்தில் பிரபாஸூக்கு வில்லனாக நடித்தார். இதில், பிருத்வியின் நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது. இதனிடையே நடிப்பை தவிர இயக்கத்திலும் பிருத்விராஜ் ஆர்வம் காட்டி வருகிறார். மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தின் இயக்குநராக அறிமுகமான அவர், அப்படம் ஹிட் அடித்ததை தொடர்ந்து அடுத்து லூசிபர் 2-ம் பாகத்தை இயக்கி வருகிறார்.

இதனிடையே, பிருத்விராஜ் தற்போது ஆடு ஜீவிதரம் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து உள்ளார். அரபு நாட்டுக்கு வேலை செல்லும் கதாநாயகன் அங்கு ஆடு மேய்க்க விடப்பட்டு பாலைவனத்தில் மாட்டிக்கொண்டு, அங்கிருந்து தப்பிப்பது தான் கதை. பிரபல எழுத்தாளர்‌ பென்‌ யாமின்‌ எழுதிய நாவலை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியிருக்கிறது. ப்ளஸ்ஸி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்து இருக்கிறார்.
இந்நிலையில், அண்மையில் படத்தின் முதல் தோற்றம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இது தொடர்பாக பேசிய அவர், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஆடு ஜீவிதம் படத்திற்காக எல்லைகளை தாண்டி பணியாற்றி உள்ளேன். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளை இப்படத்திற்காக அர்ப்பணித்துள்ளேன். பாகுபலி, கேஜிஎஃப் படங்களுக்கு இணையாக ஆடு ஜீவிதம் திரைப்படம் அமையும் என்பதில் உறுதி என பிருத்விராஜ் தெரிவித்துள்ளார்.

MUST READ