- Advertisement -
நேரம் திரைப்படம் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு இயக்குநாரக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்ரன். இப்படத்தில் நிவின்பாலி மற்றும் நஸ்ரியா நாசிம் ஆகியோர் நடித்திருந்தனர். அவர் இயக்கிய மலையாள படமான பிரேமம் கேரளா மட்டுமன்றி தமிழிலும் பெரும் வரவேற்பை பெற்றது. சுமார் 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடிய பிரேமம் திரைப்படம் பல லட்சம் ரூபாய் வசூலில் பட்டையை கிளப்பியது. மேலும், நிவின்பாலியின் திரையுலகில் பிரேமம் திரைப்படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தின் மூலம் தான் சாய்பல்லவியும் நாயகியாக அறிமுகமானார்.