Homeசெய்திகள்சினிமாபல கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு காரை வாங்கிய பிரபல மாஸ் ஹீரோ

பல கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு காரை வாங்கிய பிரபல மாஸ் ஹீரோ

-

 
ஹீரோவாக அறிமுகமாகி இன்று ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் தன் வில்லத்தனமான நடிப்பால் அசரடிக்கும் நட்சத்திரம் பிருத்விராஜ். முதலில் ஹீரோ கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வந்த பிருத்வி, தற்போது வில்லன் வேடங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இவர் மலையாள நடிகராக இருந்தாலும், தமிழில் கனா கண்டேன், பாரிஜாதம், சத்தம்போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித்திரை, அபியும் நானும், நினைத்தாலே இனிக்கும் உள்பட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இது தவிர இந்தியிலும் அவர் 3 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இறுதியாக பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், ஆடு ஜீவிதம் திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
நடிப்பு மட்டுமன்றி இயக்கத்திலும் பிருத்விராஜ் ஆர்வம் காட்டி வருகிறார். லூசிபர் என்ற படத்தின் மூலம் அவர் இயக்குநராக அறிமுகம் ஆனார். தற்போது அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லூசிபர் 2-ம் பாகத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தெலுங்கில் ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் புதிய படத்திலும் வில்லனாக பிருத்விராஜ் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகரும் இயக்குநருமான பிருத்விராஜ், புதிய கார் ஒன்றை வாங்கி உள்ளார். Porsche 911 GT3 Touring என்ற இந்த உயர்ரக சொகுசு காரின் விலை சுமார் 3 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. ஆடு ஜீவிதம் படத்திற்கு கிடைத்த வெற்றியை கொண்டாடும் விதமாக இந்த காரை பிருத்விராஜ் வாங்கியிருப்பதாக தெரிகிறது.

MUST READ