நடிகர் ரஜினிகாந்த் உடல்நலத்துடன் ஆரோக்கியமாக இருக்கிறார். அக்டோபர் 15 ம் தேதி முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
கூலி படப்பிடிப்பில் இருந்து சென்னைக்கு வந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் குறித்து செய்திகள் வந்ததை அடுத்து விமான நிலையத்தில் அதற்கான விளக்கம் அளித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் நன்றாக இருக்கிறார் நேற்று கூட அவரிடம் பேசினேன் என்று கூறிய லோகேஷ் கனகராஜ், கடந்த 40 நாட்களுக்கு முன்பு வைசாகில் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு அப்போதே நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து இருந்தார். செப்டம்பர் 30 ஆம் தேதி மருத்துவ சிகிச்சைக்காக செல்வதாக கூறியிருந்தார். 30 ஆம் தேதி சிகிச்சைக்கு செல்ல வேண்டும் என்பதால் 28 ஆம் தேதி அவருடைய படப்பிடிப்பு முடித்து அனுப்பி வைத்தோம். 29 ஆம் தேதி சென்னை வந்தவர் அன்று மாலை மருத்துவமனைக்கு வழக்கமான சிகிச்சைக்கு சென்றார். இதுதான் நடந்தது. அந்த செய்தி எப்படி வைரல் ஆனது என தெரியவில்லை.
ரஜினி சார் உடல்நலத்தை மீறி படமா என்றால் இல்லை. ரஜினி சார் உடல் நலம் தான் முதன்மையானது. படப்பிடிப்பின் பொழுது ரஜினி சாருக்கு அதுபோல் ஏதேனும் ஏற்பட்டிருந்தால் நாங்கள் ஒட்டுமொத்த படக்குழுவினரும் ஹாஸ்பிடலில் வந்து இருந்திருப்போம். சன் பிக்சர்ஸ் போன்ற தயாரிப்பு நிறுவனம் அவர்களுடைய ஹீரோவிற்கு இது போன்ற ஏதேனும் ஏற்பட்டிருந்தால் மேலும் படம் பிடிப்பதற்கு நிதியை தரப்போவது கிடையாது. முதலில் சாரை பார்ப்போம் இங்கே வாருங்கள் என்று அழைத்திருப்பார்கள்.
நாங்களெல்லாம் படப்பிடிப்பில் இருக்கும் பொழுது 40 நாட்களுக்கு முன்பே இது குறித்து எங்களுக்கு தெரிந்த பிறகு நாங்கள் படப்பிடிப்பிற்கான கால அட்டவணை தயாரித்த பிறகு இது போன்ற செய்திகள் எப்படி வைரல் ஆனது என தெரியவில்லை.
நிறைய பேர் யூடியூப் மட்டுமே பார்க்கிறார்கள். நாங்கள் வேலையில் இருந்ததால் எங்களுக்கு பெருசாக பேனிக் ஆனது ஒவ்வொருத்தரும் ஒரு மாதிரி பேசும்போது எங்களுக்கு பீதியை ஏற்படுத்தி இருந்தது.
ரஜினி சாரை எல்லாரும் கொண்டாடுகிறோம். திடீர்னு இப்படி பேசுவது, குறிப்பாக எல்லோரும் உறுதியாக உடனிருந்து பார்த்தவர்கள் போல் பேசியது எங்களை பயமுறுத்தி விட்டது. நாங்கள் 540 பேர் இங்கிருந்து படபிடிப்பதற்காக வெளியே சென்று இருக்கிறோம் எங்களுடைய மனநிலை என்னவாக இருக்கும். அவரை அவருடைய வழக்கமான மருத்துவ சிகிச்சைக்காக நாங்கள் அனுப்பி வைத்திருந்தோம். ஆனால் அது குறித்து மற்றவர்கள் அதிகமாக எழுதியிருப்பது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
ரஜினி சார் நன்றாக இருக்கிறார். அவர் எப்பொழுதும் சொல்வது போல ஆண்டவன் அருளால் ஒன்றும் ஆகாது. மற்றவர்கள் எழுதுவதை பார்க்கும் பொழுது எங்களுக்கு பேணிக்காக உள்ளது.மீடியா மற்றும் யூ டியூப் சேனல்களுக்கு கோரிக்கை வைக்கிறேன் இதுபோன்று யார் குறித்தும் பீதியை ஏற்படுத்தாதீர்கள்.
உங்களுக்கு ஏதேனும் தகவல் தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். இல்லை என்றால் இங்கேதான் சன் பிக்சர்ஸ் இருக்கிறது அதனை தொடர்பு கொள்ளுங்கள். சன் பிக்சர்ஸ் கூறுவதை அதிகாரப்பூர்வமாக தெரிவியுங்கள். அக்டோபர் 15ஆம் தேதியில் இருந்து மீண்டும் ரஜினி சார் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று தெரிவித்தார்