Homeசெய்திகள்சினிமாஅவர் இயக்குனர்களின் ராஜா.... சங்கர் குறித்து பேசிய ராம் சரண்!

அவர் இயக்குனர்களின் ராஜா…. சங்கர் குறித்து பேசிய ராம் சரண்!

-

- Advertisement -
kadalkanni

நடிகர் ராம் சரண் இயக்குனர் சங்கர் குறித்து பேசியுள்ளார்.அவர் இயக்குனர்களின் ராஜா.... சங்கர் குறித்து பேசிய ராம் சரண்!இயக்குனர் சங்கர் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இருப்பினும் கடந்த ஜூலை மாதம் இவரது இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதே சமயம் இவரது இயக்கத்தில் உருவாகி இருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இந்த படத்தில் ராம் சரண், எஸ்.ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, சுனில், ஸ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். திருநாவுக்கரசு இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இப்படமானது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதற்கான ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதன்படி சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராம் சரண் இயக்குனர் சங்கர் குறித்து பேசி உள்ளார்.அவர் இயக்குனர்களின் ராஜா.... சங்கர் குறித்து பேசிய ராம் சரண்! அவர் பேசியதாவது, “சங்கர் சார் படத்தில் நடிக்கப் போகிறேன் என்று தெரிந்த போது அதை என்னால் நம்பவே முடியவில்லை. எல்லாம் கனவு மாதிரி இருந்தது. சங்கர் சார் இயக்குனர்களின் ராஜா. அவர் இந்திய சினிமாவின் சச்சின். அவருடன் பணிபுரிந்ததால் நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். கேம் சேஞ்சர் படத்தின் மூன்று வருட பயணத்தில் அவரிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். கேம் சேஞ்சர் படம் திரையரங்குகளில் அனைவருக்கும் சிறந்த அனுபவத்தை தரும். இயக்குனர் சங்கரின் சிறந்த படங்களில் ஒன்றாக இந்த படமும் இருக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.

MUST READ