நடிகர் ராம் சரண் தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர். இவர் தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழிலும் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வரும் நிலையில் இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் சங்கர் இயக்க ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் படத்தினை தயாரித்திருக்கிறது. தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். திருநாவுக்கரசு இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். இந்த படத்தில் ராம் சரண் உடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் பின்னணி வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் படத்தின் அடுத்தடுத்த பாடல்களும் டீசரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் ஆந்திராவின் கடப்பாவில் உள்ள அமீன் பீர் பெரிய தர்காவில் 80வது தேசிய முஷைரா கஜல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
Ramcharan storm in Kadapa. pic.twitter.com/Jubks1S63k
— Manobala Vijayabalan (@ManobalaV) November 18, 2024
இந்த சமயத்தில் நடிகர் ராம் சரண், சபரிமலைக்கு ஐயப்ப மாலை அணிந்த போதிலும் இஸ்லாமியர்களின் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அவரை கடப்பாவிலுள்ள ரசிகர்கள் பலரும் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர். மேலும் ஐயப்ப மாலையை அணிந்து கொண்டு இஸ்லாமிய நிகழ்ச்சியில் ராம் சரண் பங்கேற்றது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் ராம் சரணின் இந்த செயல் மத ஒற்றுமையை குறிக்கிறது என பலரும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.