Homeசெய்திகள்சினிமாதன் மகளை நினைத்து கண் கலங்கிய நடிகர் ராமராஜன்!

தன் மகளை நினைத்து கண் கலங்கிய நடிகர் ராமராஜன்!

-

- Advertisement -

நடிகர் ராமராஜன் சினிமாவில் நடிகனாக அழகு, ஆடை, அலங்காரம் போன்றவை எதுவும் தேவையில்லை என்ற எண்ணத்தை உடைத்து எறிந்தவர்.தன் மகளை நினைத்து கண் கலங்கிய நடிகர் ராமராஜன்! அதன்படி ரஜினி, கமல் போன்றோர் மாஸான லுக்கில் நடித்த காலகட்டத்தில் அரைக்கால் ட்ரவுசர் அணிந்து நடித்து சினிமாவில் மக்கள் நாயகனாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். அந்த வகையில் இவர் சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் எழுத்தாளரும் இயக்குனரும் ஆவார். அதேசமயம் இவர் அரசியலிலும் ஆர்வமுடையவர். இவர் நடிப்பில் வெளியான கரகாட்டக்காரன், மனசுக்கேத்த மகராசா, பாட்டுக்கு நான் அடிமை, எங்க ஊரு பாட்டுக்காரன் போன்ற பல படங்கள் ரசிகர்களுக்கு இன்றளவும் பிடித்தமான படங்களாகும். கிட்டத்தட்ட 30 க்கும் அதிகமான படங்களில் நடித்து வந்த ராமராஜன் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். அந்தப் படத்திற்கு சாமானியன் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ராமராஜன் பேட்டி ஒன்றில் பேசியது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. தன் மகளை நினைத்து கண் கலங்கிய நடிகர் ராமராஜன்!அவர் அந்த பேட்டியில் தன்மகள் குறித்து பேசி இருக்கிறார். அதாவது ராமராஜன் – நளினி தம்பதிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். இரண்டு பிள்ளைகளுக்கும் திருமணமான நிலையில் மகனுக்கு குழந்தை இருப்பதாகவும் அந்த குழந்தை தன்னை ‘மாடு தாத்தா’ என்று செல்லமாக அழைப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் தனது மகளுக்கு இன்னும் குழந்தை பிறக்காதது தான் தனக்கு வருத்தம் அளிப்பதாக கண்ணீருடன் பேசியுள்ளார்.

MUST READ