கங்குலி பயோபிக்; நடிகர் ரன்பீர்கபூர் விளக்கம்
கங்குலியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிப்பது குறித்து, பாலிவுட் பிரபலம் ரன்பீர் கபூர் விளக்கம் அளித்துள்ளார்.
அனிமல் திரைப்படத்தில் நடிக்கும் ரன்பீர்
பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர்கபூர், சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் அனிமல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ரன்பீருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார்.
கங்குலி பயோபிக்
இதையடுத்து, பிரபல கிரிக்கெட் நட்சத்திரம் கங்குலியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் ரன்பீர் கபூர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த படத்தை மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஸ்ரீஜித் முகர்ஜி இயக்குவதாக கூறப்படுகிறது. அண்மையில், கங்குலியை ரன்பீர் கபூர் சந்தித்தை வைத்து இந்த தகவல் இணையத்தில் பரவியது.
ரன்பீர் கபூர் விளக்கம்
இந்நிலையில், கங்குலி பயோபிக் படத்தில் நடிப்பது தொடர்பாக நடிகர் ரன்பீர் கபூர், விளக்கம் அளித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கங்குலி இந்தியா மட்டுமன்றி, உலகம் முழுவதும் கொண்டாடும் லெஜண்ட். அவரை பற்றிய வாழ்க்கை படம் எடுக்கப்படுவது மிகவும் சிறப்பானது என்றார். ஆனால், துரதிருஷ்டவசமாக இந்த படத்தில் தான் நடிக்கவில்லை என்றும், தனக்காக இயக்குநர்கள் காதல் கதைகளை மட்டுமே எழுதுவதாகவும் ரன்பீர் கூறினார்.