Homeசெய்திகள்சினிமாசரத்பாபு உடல்நிலை கவலைக்கிடம்... சோகத்தில் தவிக்கும் குடும்பம்!

சரத்பாபு உடல்நிலை கவலைக்கிடம்… சோகத்தில் தவிக்கும் குடும்பம்!

-

நடிகர் சரத் பாபுவின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

நடிகர் சரத் பாபு தென்னிந்திய சினிமாவில் 220 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அவர் 50 வருடங்களுக்கு மேலாக சினிமா துறையில் இருக்கிறார். அவருக்கு தற்போது 72 வயது ஆகிறது.

 

இந்நிலையில் சரத் பாபு உடல்நிலை சரியில்லாமல் கடந்த ஏப்ரல் 20ம் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடலில் பல்வேறு உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Sepsis என்ற நோயின் காரணமாக அவரின் கிட்னி, நுரையீரல் மற்றும் கல்லீரல் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சில மருத்துவர்கள் கொண்ட குழு அவரின் உடல்நலத்தை மீட்க போராடி வருகின்றனர்.

சரத்பாபுவின் குடும்பத்தினர் அவர் உடல்நிலை பற்றி தற்போது வரை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. Sepsis என்ற நோய் என்பது ரத்தத்தில் நச்சு பொருளாய் கலந்து அது உடலின் பல்வேறு உறுப்புகளை பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

அவர் கடந்த சில வருடங்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இந்த மாதத்தின் துவக்கத்தில் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். பின்னர் உடல்நிலை மோசமாகவே தற்போது அவர் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

MUST READ