Homeசெய்திகள்சினிமாசினிமா இல்லாவிட்டால் விவசாயம் உள்ளது... நடிகர் சத்யராஜ் துணிகர பேச்சு...

சினிமா இல்லாவிட்டால் விவசாயம் உள்ளது… நடிகர் சத்யராஜ் துணிகர பேச்சு…

-

- Advertisement -
தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் சத்யராஜ். தற்போது பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். அதே சமயம் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். அவரது நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் அன்னபூரணி. இப்படத்தில் நயன்தாரா, ஜெய்யுடன் சேர்ந்து சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இதனிடையே, சத்யராஜ் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வௌியான புதிய திரைப்படம் தான் வெப்பன். இப்படத்தில், சத்யராஜுடன் இணைந்து வசந்த் ரவி, தான்யா ஹோப் ராஜுவ் மேனன், ராஜிவ் பிள்ளை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அண்மையில் பிரதமர் மோடியின் பயோபிக்கில் சத்யராஜ் நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து விளக்கமும் அளித்திருந்தார் சத்யராஜ்.

இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சத்யராஜ், தற்போதைய நடிகர்களுக்கு தைரியம் இருப்பதில்லை என்றார். படத்தில் சமூக கருத்தோ, அரசியலோ பேசுவது செத்த பாம்பை அடிப்பது போலத்தான், உச்சத்தில் இருப்பவர்களின் தலையில் கை வைக்க வேண்டும் என கூறினார். ஆனால் இதற்கு பலர் பயப்படுவதாகவும், தனக்கு பயம் இல்லை, சினிமா இல்லாவிட்டால் விவசாயம் பார்த்துக் கொள்வேன் என்றும் கூறியிருக்கிறார். ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தில் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

MUST READ