நடிகர் செந்தில் பிறந்தநாள் ஸ்பெஷல்!
நடிகர் செந்தில் 28 வயது இருக்கும்போதே தன் திரை பயணத்தை தொடங்கியவர். இவர் பசி என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின் பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்தார். அதன் பின் இவர் கவுண்டமணியுடன் இணைந்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார். டிக்கிலோனா காமெடியாக இருக்கட்டும், ரெண்டு வாழைப்பழத்தில் ஒன்று இந்தா இருக்கு இன்னொன்னு எங்க என்ற காமெடியாக இருக்கட்டும், அவ்வ அவ்வ அவ்வாவ்வா காமெடி என பல காமெடிகள் இன்றுவரையிலும் ரசிகர்களின் ஃபேவரைட் ஆக இருக்கிறது. மேலும் இவர் எந்த கெட்டப் போட்டாலும் அது இவருக்கும் அருமையாக பொருந்தி போகும். அதேசமயம் எத்தனை கெட்டப்பாக இருந்தாலும் அந்த கதாபாத்திரமாகவே நடித்து அசத்தி விடுவார். அடிவாங்கி அடி வாங்கியே தலைவரு சிறந்த காமெடியனாக ரசிகர்கள் இடம் அடையாளப்படுத்தி தனக்கான தனி முத்திரையை பதித்தவர் செந்தில். இவர் கமல், ரஜினி, பிரசாந்த், அஜித், விஜய் என பல உச்ச நட்சத்திரங்களுடன் பணியாற்றி இருக்கிறார். இவர் கவுண்டமணியுடன் மட்டுமல்லாமல் தனியாக இவர் செய்யும் லூட்டியில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அந்த வகையில் ஒரு லெஜெண்ட்டாகவே ரசிகர்கள் மனதில் வாழ்ந்து வருகிறார் செந்தில். சமீபத்தில் வெளியான லால் சலாம் திரைப்படத்திலும் செந்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடி வரும் லெஜன்ட் செந்திலுக்கு சாமு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்வோம்.