கன்னட நடிகர் சிவராஜ்குமார் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.
கன்னட நடிகர் சிவராஜ்குமார் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மூத்த மகன் என்பது அனைவரும் அறிந்ததே. கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் இவருக்கு இந்திய அளவில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதே சமயம் இவர் கன்னடம் தவிர தமிழ் போன்ற மற்ற மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தமிழில் இவர், ரஜினியுடன் இணைந்து ஜெயிலர், தனுஷ் உடன் இணைந்து கேப்டன் மில்லர் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். அடுத்தது இவர் ரஜினியின் ஜெயிலர் 2 திரைப்படத்திலும் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் சிவராஜ்குமாருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னதாக உடல்நல பிரச்சனை இருப்பதாக தகவல் வெளியானது. அதன்படி அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல தகவல்கள் வெளியாகி ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த தகவல் சிவராஜ்குமார் தரப்பில் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் தான் சிவராஜ்குமார் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். வருகின்ற டிசம்பர் 24ஆம் தேதி ஃப்ளோரிடாவில் உள்ள மியாமி இன்ஸ்டியூட்டில் சிவராஜ்குமாருக்கு அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Comeback stronger @NimmaShivanna sir 💪💪💪💪
Wishing for successful treatment and speedy recovery 🙏🙏
Eagerly waiting to see you in #Jailer2 #Shivarajkumar pic.twitter.com/ond06fGHyu
— Suresh Balaji (@surbalu) December 19, 2024
இது தொடர்பாக நடிகர் சிவராஜ்குமார் செய்தியாளர்களை சந்தித்த போது, “இந்த செய்தியை ஊடகங்கள் பெரிது படுத்தாமல் இருந்ததற்கு மிகவும் நன்றி. நடிகர்கள், ரசிகர்கள் அனைவரும் எனக்கு வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி. திடீரென அறுவை சிகிச்சைக்காக செல்வது வீட்டில் பதற்றத்தை உண்டாக்கும். என்னுடைய குடும்பத்தினர், உறவினர்கள், ரசிகர்களை பார்க்கும்போது எனக்கு எமோஷனல் ஆகிறது. அவர்களை பார்க்கும்போது கவலையாக இருக்கிறது. இருந்தாலும் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். சிகிச்சை முடித்துவிட்டு விரைவில் திரும்பி வருவேன்” என்று பேசியுள்ளார்.