Homeசெய்திகள்சினிமாபிரபல நடிகையை ரகசிய திருமணம் செய்து கொண்ட நடிகர் சித்தார்த்!

பிரபல நடிகையை ரகசிய திருமணம் செய்து கொண்ட நடிகர் சித்தார்த்!

-

நடிகர் சித்தார்த், கடைசியாக சித்தா படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வெற்றி படமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து சித்தார்த் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் கசிந்திருந்தது. மேலும் குருதி ஆட்டம் பட இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. இந்நிலையில் நடிகர் சித்தார்த பிரபல நடிகை அதிதி ராவ்- ஐ ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.பிரபல நடிகையை ரகசிய திருமணம் செய்து கொண்ட நடிகர் சித்தார்த்!

நடிகை அதிதி ராவ், கார்த்தி நடிப்பில் வெளியான காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம், சைக்கோ போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவரும் இணைந்து பல இடங்களுக்கு செல்வதும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் இருவரும் இணைந்துள்ள புகைப்படங்களை பகிர்ந்து வருவதுமாக இருந்தனர். அதன்படி ஏற்கனவே இருவரும் காதலிக்கிறார்கள் என்று பல தகவல்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வந்தது. இந்நிலையில் இருவரும் தெலுங்கானாவில் உள்ள ஸ்ரீரங்கபுரம் கோவிலில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. பிரபல நடிகையை ரகசிய திருமணம் செய்து கொண்ட நடிகர் சித்தார்த்!நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் மட்டும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின்றன. எனவே இருவரும் விரைவில் இது தொடர்பாக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ