Homeசெய்திகள்சினிமாவடிவேலு குறித்து அவதூறு பேச மாட்டேன்.... நடிகர் சிங்கமுத்து உறுதி!

வடிவேலு குறித்து அவதூறு பேச மாட்டேன்…. நடிகர் சிங்கமுத்து உறுதி!

-

நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர். இவருடைய நகைச்சுவைகள் பல இன்றுவரையிலும் ரசிகர்களின் பேவரைட்டாக இருந்து வருகிறது.வடிவேலு குறித்து அவதூறு பேச மாட்டேன்.... நடிகர் சிங்கமுத்து உறுதி! அதிலும் பார்த்திபன் – வடிவேலு காம்போவில் வெளியான காமெடிகள் ரசிகர்கள் வெகுவாக கவர்ந்தன. அதேபோல் வடிவேலு – சிங்கமுத்து காம்போவில் வெளியான காமெடிகளும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்படி வடிவேலு மற்றும் சிங்கமுத்து ஆகியோர் இணைந்து திமிரு, பம்பரக்கண்ணாலே போன்ற பல படங்களை இணைந்து நடித்திருக்கின்றனர். இந்நிலையில் தான் நடிகர் சிங்கமுத்து பேட்டி ஒன்றில், நடிகர் வடிவேலுவின் வெற்றிக்கு தான் காரணம் எனவும் அவர் சேகரித்து வைத்திருக்கும் பணமும் புகழும் தன்னால் உருவானது தான் என பேசியிருந்தார். இதுகுறித்து நடிகர் வடிவேலு சிங்கமுத்து தன்னை பற்றி அவதூறு பரப்புவதாக கூறி இதன் காரணமாக சிங்கமுத்து தனக்கு ரூ. 5 கோடி மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். வடிவேலு குறித்து அவதூறு பேச மாட்டேன்.... நடிகர் சிங்கமுத்து உறுதி!இந்த வழக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் விசாரணைக்கு வந்த நிலையில், நடிகர் வடிவேலு குறித்து அவதூறு கருத்து தெரிவிக்க சிங்கமுத்துவிற்கு தடைவிதித்தும் வடிவேலு குறித்து அவதூறு தெரிவிக்க மாட்டேன் என சிங்கமுத்து உத்திரவாத மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது. இந்நிலையில் நடிகர் சிங்கமுத்து, வடிவேலுக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க மாட்டேன் எனவும் இந்த விசாரணை முடியும் வரை வாய்மொழியாகவோ எழுத்துப்பூர்வமாகவோ டிஜிட்டல் முறையிலோ எந்த அவதூறு கருத்தும் தெரிவிக்க மாட்டேன் என்று உறுதியளித்துள்ளார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி இந்த வழக்கை வருகின்ற ஜனவரி 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

MUST READ