கடந்த 2022 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கியிருந்தார். இதில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பிரியங்கா அருள் மோகன், எஸ் ஜே சூர்யா, சூரி, சிவாங்கி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அடுத்ததாக மீண்டும் சிவகார்த்திகேயன், சிபி சக்கரவர்த்தி கூட்டணி புதிய படம் ஒன்றில் இணைய உள்ளது. SK24 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்திக்கு வர்ஷினி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. ரசிகர்கள் பலரும் இந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் மிகச் சிறப்பாக நடந்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன், சிவாங்கி, எஸ் ஜே சூர்யா, அயலான் பட இயக்குனர் ஆர் ரவிக்குமார், அட்லீ போன்றோர் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.