Homeசெய்திகள்சினிமாவிஜயகாந்த் மறைவுக்கு நடிகர் சிவக்குமார் இரங்கல்

விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் சிவக்குமார் இரங்கல்

-

- Advertisement -
இன்று அதிகாலை உயிரிழந்த கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு, நடிகரும், சூர்யா, கார்த்தியின் தந்தையுமான சிவகுமார் இரங்கல் தெவிவித்துள்ளார்.

விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. இதைத் தொடர்ந்து விஜயகாந்த் காய்ச்சல் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் கடந்த நவம்பர் 18-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். சில நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மியாட் மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் விஜயகாந்துக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், அவர் குணமடைந்து வீடு திரும்பினார். தேமுதிக கட்சி நிகழ்ச்சிகளிலும் அவர் திடமாக கலந்து கொண்டார். இந்நிலையில், திடீரென அவர் எதிர்பாராத விதமாக இன்று காலை உயிரிழந்தார். விஜயகாந்த் மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவக்குமாரும் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இருக்கிறார். அது தொடர்பான பதிவில்,

தமிழ்நாடு அரசியலில் எம்.ஜி.ஆரை அடுத்து நம்பிக்கையான ஒரு தலைவராக உருவாகிக் கொண்டருந்தவர். ஆயிரக்கணக்கில் ரசிகர்களை மாதம் ஒருமுறை நேரில் சந்தித்ததைகோபி படப்பிடிப்பில் பார்த்துள்ளேன். தி.நகர் ரோகிணி லாட்ஜில் உள்ள தன் அறையில் நண்பர்களை தங்கவிட்டு படப்பிடிப்பு முடிந்து வந்து வெராண்டாவில் படுத்துக்கொள்வார். எளிமையானவர், நேர்மையானவர். நடிகர் சங்க தலைவராக அவர் இருந்த போது கமல், ரஜினியை மலேசிய கலைநிகழ்ச்சிக்கு நேரில் அழைக்கச்சென்று அவர்கள் கரம் பற்றி வேண்டிக்கொண்டவர். ‘சாமந்திப்பூ’ -படத்தில் சிறு வேடத்தில் என்னோடு நடித்தார். ‘புதுயுகம்’ – படத்தில் என் உயிர் நண்பனாக நடித்தார். கலையுலகம், அரசியல் உலகம் ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்டது. சூர்யா, கார்த்தியுடன் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ