Homeசெய்திகள்சினிமாமா.பொ.சி தலைப்பை 'சார்' என்று மாற்ற காரணமே நடிகர் சிவக்குமார் தான்.... போஸ் வெங்கட் பேச்சு!

மா.பொ.சி தலைப்பை ‘சார்’ என்று மாற்ற காரணமே நடிகர் சிவக்குமார் தான்…. போஸ் வெங்கட் பேச்சு!

-

சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி என்ற மெகா தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் போஸ் வெங்கட். தொடர்ந்து அரசி, லக்ஷ்மி என்ன பல மெகா தொடர்களில் நடித்து வந்தார்.மா.பொ.சி தலைப்பை 'சார்' என்று மாற்ற காரணமே நடிகர் சிவக்குமார் தான்.... போஸ் வெங்கட் பேச்சு! பின்னர் இவருடைய நடிப்புத் திறமையை கண்டு இயக்குனர் பாரதிராஜா தனது ஈர நிலம் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புளித்தார். அதைத்தொடர்ந்து தாம் தூம், தீபாவளி, சரோஜா, கோ, சிங்கம், தேவராட்டம் என பல படங்களில் நடித்திருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராமராஜன் நடிப்பில் வெளியான சாமானியன் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார் போஸ்ட் வெங்கட். இந்நிலையில் இவர் கன்னி மாடம் என்ற படத்திற்கு பிறகு விமல் நடிப்பில் சார் எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தினை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் நிறுவனமும் எஸ் எஸ் எஸ் பிச்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது. சித்து குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மா.பொ.சி தலைப்பை 'சார்' என்று மாற்ற காரணமே நடிகர் சிவக்குமார் தான்.... போஸ் வெங்கட் பேச்சு!கல்வி தொடர்பான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் நாளை (அக்டோபர் 18) திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போஸ் வெங்கட், மா.பொ.சி எனும் தலைப்பை சார் என மாற்றுவதற்கு சிவக்குமார் தான் காரணம் எனக் கூறியுள்ளார். அதாவது, “சிவகுமார் கேட்டுக் கொண்டதால்தான் “மா.பொ.சி என்ற தலைப்பை சாரி என மாற்றினேன். ஏனென்றால் சிவகுமார், மா.பொ.சி குறித்து ஆவணப்படம் ஒன்றை உருவாக்க உள்ளார். எனக்கு சூர்யா மற்றும் அவருடைய தந்தை சிவக்குமார் ஆகியோரை பல வருடங்களாக தெரியும். அவர் கேட்டதும் நான் மறுப்பு தெரிவிக்கவில்லை. உடனே டைட்டிலை மாற்றி விட்டேன். அவர்களை எதிர்த்து அதே டைட்டிலை வைக்க எனக்கு திராணி இல்லை” என்று தெரிவித்துள்ளார்.மா.பொ.சி தலைப்பை 'சார்' என்று மாற்ற காரணமே நடிகர் சிவக்குமார் தான்.... போஸ் வெங்கட் பேச்சு!

மேலும் போஸ் வெங்கட்டிடம் விமல் ஏன் சார் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை உங்களுக்கும் அவருக்கும் பிரச்சனையா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “விமலும் நானும் உண்மையில் சொந்தக்காரங்க. எனக்கும் அவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. அவர் வேறொரு படத்தில் கமிட்டாகி இருப்பதால் அவரால் ப்ரோமோஷனில் கலந்து கொள்ள முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார் போஸ் வெங்கட்.

MUST READ