தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளியான வாலி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே. சூர்யா. தன்னுடைய முதல் படத்திலேயே பெயரையும் புகழையும் பெற்ற எஸ்.ஜே. சூர்யா அடுத்தது விஜயின் குஷி படத்தையும் இயக்கி வெற்றி கண்டார். மேலும் நடிப்பதிலும் ஆர்வம் உடைய இவர் நியூ, அன்பே ஆருயிரே, வியாபாரி போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தார். அடுத்தது ஸ்பைடர், மெர்சல் ஆகிய படங்களில் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார். குறிப்பாக மாநாடு, மார்க் ஆண்டனி ஆகிய படங்களில் பட்டையை கிளப்பிய இருந்தார். அதே சமயம் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் வில்லனாக நடித்து வருகிறார் எஸ்.ஜே. சூர்யா. அதன்படி சமீபத்தில் வெளியான வீர தீர சூரன் படத்திலும் வில்லனாக நடித்திருக்கிறார். மேலும் இவர் எல்ஐகே போன்ற படங்களை கைவசம் வைத்துள்ள நிலையில் ஜெயிலர் 2 திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இவர் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கஷ்டம் வரும்போது அழக்கூடாது என அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.
அதன்படி அவர், “ஐந்து வருடங்களுக்கு முன்பாக உங்களுக்கு ஒரு கஷ்டமான விஷயம் நடந்திருக்கும். அந்த சமயத்தில் நீங்க ரொம்பவே அழுது இருப்பீங்க. ஆனால் 5 வருடத்திற்கு பிறகு பார்த்தா, உங்கள அழ வைத்த அந்த சம்பவம் தான் நீங்கள் இப்போது நல்லா இருக்க காரணமாக இருக்கும். அதாவது இந்த விஷயத்துனால நம்ம நல்லா இருக்க போறோம் என்று தெரியாமலேயே நீங்க அழுது இருப்பீங்க. அப்போ நமக்கு வாழ்க்கையில் கஷ்டம் வரும்போது அழுவதை நிறுத்திக் கொள்வது நல்லது” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -