கேரள பல்கலைக்கழகத்தில் சன்னி லியோன் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு
- Advertisement -
கேரள பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த சன்னி லியோனின் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பாலிவுட்டில் தொடக்கத்தில் ஆபாச காட்சிகளில் நடித்து சர்ச்சைகளுக்கு ஆளானவர் நடிகை சன்னி லியோன். இதைத் தொடர்ந்து அவர் பாலிவுட்டில் நல்ல திரைக்கதை கொண்ட திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக உருவெடுத்த அவர், 2014-ம் ஆண்டு ஜெய் நடித்த வடகறி படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகம் ஆகினார். பாலிவுட் நடிகையாக இருந்தாலும் அவருக்கு தமிழில் பல கோடி ரசிகர்கள் உள்ளனர்.
வடகறி படத்திற்கு பிறகு மம்மூட்டி நடித்த மதுரராஜா மற்றும் ஓ மை கோஸ்ட், தீ இவன் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்போது பிரபுதேவா நடிக்கும் பேட்ட ரேப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். இது தவிர இந்தி மற்றும் தமிழ் மொழியிலும் அவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். பாலிவுட் மற்றும் கோலிவுட் ரசிகர்களின் மனதை வென்ற நடிகை சன்னி லியோன், அண்மையில் தொழில் அதிபராகவும் அவதாரம் எடுத்தார். உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா நகரில் அவர் புதிய உணவகம் ஒன்றை திறந்தார். எனவே, நடிப்பு, தொழில் மற்றும் குடும்பம் என மாறி மாறி தன் கவனத்தை செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், கேரள பல்கலைக்கழகத்தில் கலைநிகழ்ச்சி நடத்த நடிகை சன்னி லியோனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஜூலை 5-ம் தேதி நடைபெற இருந்த சன்னி லியோனின் நிகழ்ச்சியை ரத்து செய்வதாக கூறி பல்கலைக்கழக துணைவேந்தர் உத்தரவிட்டுள்ளார். கடந்தாண்டு நவம்பர் மாதம் கொச்சின் பல்கலைக்கழகத்தில் நடந்த சன்னி லியோன் நிகழ்ச்சியில் கூட்டத்தில் சிக்கி 4 மாணவர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.