Homeசெய்திகள்சினிமாஇந்தி படத்தில் நடிப்பதை உறுதி செய்த நடிகர் சூர்யா!

இந்தி படத்தில் நடிப்பதை உறுதி செய்த நடிகர் சூர்யா!

-

- Advertisement -

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்தி படத்தில் நடிப்பதை உறுதி செய்த நடிகர் சூர்யா!அதற்கான ப்ரோமோஷன் பணிகளும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது திரைப்படத்தில் நடிக்க முடித்துள்ளார் சூர்யா. அதேசமயம் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 வது திரைப்படத்திலும் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார். இவ்வாறு அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வரும் சூர்யா ஏற்கனவே பாலிவுட் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார் என தகவல் வெளியானது. அதன்படி ராகேஷ் ஓம் பிரகாஷ் இயக்கத்தில் கர்ணா எனும் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் இறுதிவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்தி படத்தில் நடிப்பதை உறுதி செய்த நடிகர் சூர்யா!அதே சமயம் தூம் 4 திரைப்படத்திலும் இவர் வில்லனாக நடிக்கப் போகிறார் என சமீபத்தில் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் நடிகர் சூர்யா, தான் இந்தி படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். அதாவது, ஓராண்டுக்கு முன்பாகவே சூர்யா பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ள புதிய படத்தின் பணிகள் தொடங்கி விட்டதாகவும் மேலும் சில பேச்சுவார்த்தைகள் நடைபெற்று இருப்பதாகவும் கூறியுள்ளார். அத்துடன் சரியான நேரம் வரும்போது தயாரிப்பாளர்கள் அறிவித்தாள் நன்றாக இருக்கும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

MUST READ