Homeசெய்திகள்சினிமாபிரபல மலையாள இயக்குனருடன் கைகோர்க்கும் நடிகர் சூர்யா.... வெளியான புதிய தகவல்!

பிரபல மலையாள இயக்குனருடன் கைகோர்க்கும் நடிகர் சூர்யா…. வெளியான புதிய தகவல்!

-

நடிகர் சூர்யா கடைசியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதே சமயம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். பிரபல மலையாள இயக்குனருடன் கைகோர்க்கும் நடிகர் சூர்யா.... வெளியான புதிய தகவல்!இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார் சூர்யா. இந்த படம் சூர்யாவின் 45 வது படமாகும். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் நடிகர் சூர்யா, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார். சூர்யா 45 படத்தை முடித்த பிறகு வாடிவாசல் திரைப்படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகர் சூர்யா, பிரபல மலையாள இயக்குனருடன் கைகோர்க்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பிரபல மலையாள இயக்குனருடன் கைகோர்க்கும் நடிகர் சூர்யா.... வெளியான புதிய தகவல்!அதன்படி சூர்யா, அமல் நீரத் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாகவும் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த இந்த படத்தின் படப்பிடிப்பை இரண்டே மாதங்களில் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது. அடுத்தது இந்த படமானது தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் அமல் நீரத் என்பவர் தமிழில் தலைநகரம், பெரியார், நான் அவன் இல்லை ஆகிய படங்களில் நடித்த பிரபலமான நடிகை ஜோதிர் மயி – இன் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ