Homeசெய்திகள்சினிமா'அயலான்' படத்தின் VFX பணிகளை பாராட்டிய நடிகர் சூர்யா!

‘அயலான்’ படத்தின் VFX பணிகளை பாராட்டிய நடிகர் சூர்யா!

-

- Advertisement -

'அயலான்' படத்தின் VFX பணிகளை பாராட்டிய நடிகர் சூர்யா!சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அயலான் திரைப்படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியானது. ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகி பாபு, இஷா கோபிகர், பானுப்ரியா உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து அயலான் படத்தில் நடித்திருந்தனர். சிவகார்த்திகேயனின்
மற்ற படங்களைப் போலவே இந்த படமும் குடும்பங்கள் ரசிக்கும் வண்ணம் அமைந்து வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் நான்கு நாட்களில் இந்த படம் 50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டது. கே ஜே ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஆர் ரகுமானின் இசையிலும் இந்த படம் உருவாகியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக ரிலீஸாகாமல் கிடப்பில் கிடந்த அயலான் படம் தற்போது வெற்றி நடை போடுகிறது.'அயலான்' படத்தின் VFX பணிகளை பாராட்டிய நடிகர் சூர்யா!அதே சமயம் அயலான் படத்தின் VFX பணிகள் கதாபாத்திரத்தோடு ஒன்றி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளதாக பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் சூர்யா, “Phantom – ஆல் செய்யப்பட்ட வேலையை விரும்பினேன். இது சிறந்து விளங்குவதற்கான உங்கள் ஆர்வத்தைக் காட்டுகிறது. அற்புதமான வெளியீடு. எங்கள் அனைவரின் இதயங்களை வென்றது” என்று Phantom FX குழுவை, பூங்கொத்து அனுப்பி வாழ்த்தியுள்ளார்.

MUST READ