Homeசெய்திகள்சினிமாஅல்லு அர்ஜுன் நடனம் எனக்கு பிடிக்கும்.... 'புஷ்பா 2' படத்திற்காக காத்திருக்கிறேன்.... சூர்யா பேச்சு!

அல்லு அர்ஜுன் நடனம் எனக்கு பிடிக்கும்…. ‘புஷ்பா 2’ படத்திற்காக காத்திருக்கிறேன்…. சூர்யா பேச்சு!

-

- Advertisement -

நடிகர் சூர்யா, கங்குவா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அல்லு அர்ஜுன் குறித்து பேசியுள்ளார்.அல்லு அர்ஜுன் நடனம் எனக்கு பிடிக்கும்.... 'புஷ்பா 2' படத்திற்காக காத்திருக்கிறேன்.... சூர்யா பேச்சு!சிறுத்தை சிவாவின் இயக்கத்திலும் சூர்யாவின் நடிப்பிலும் தற்போது உருவாகியிருக்கும் கங்குவா திரைப்படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரா தயாராகி வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் டீசர், ட்ரைலர் என அடுத்தடுத்து வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. எனவே படத்தினை திரையரங்குகளில் காண ரசிகர்கள் பலரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் டெல்லி, மும்பை, ஐதராபாத் போன்ற பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. அதைத்தொடர்ந்து பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவும் சமீபத்தில் நடந்து முடிந்தன. அல்லு அர்ஜுன் நடனம் எனக்கு பிடிக்கும்.... 'புஷ்பா 2' படத்திற்காக காத்திருக்கிறேன்.... சூர்யா பேச்சு!இந்நிலையில் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா, அல்லு அர்ஜுன் குறித்து பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் பேசியதாவது, “என்னுடைய சில படங்களை அல்லு அர்ஜுன் விநியோகம் செய்துள்ளார். நான் இந்த மேடையில் நிற்பதற்கு அல்லு அர்ஜுன் மற்றும் அல்லு அரவிந்த் ஆகிய இருவரும் முக்கிய காரணம். அவருடைய கடின உழைப்பிற்கு நான் மிகப்பெரிய ரசிகன். அதேபோல் அவருடைய நடனமும் எனக்கு பிடிக்கும். புஷ்பா 2 படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ