Homeசெய்திகள்சினிமா"குழந்தைகளுடன் கீழடிக்கு கண்டிப்பா வாங்க"... வேண்டுகோள் வைத்துள்ள சூர்யா!

“குழந்தைகளுடன் கீழடிக்கு கண்டிப்பா வாங்க”… வேண்டுகோள் வைத்துள்ள சூர்யா!

-

- Advertisement -

நடிகர் சூர்யா கீழடி சென்றதுடன் அங்கு அனைவரும் வருகை புரிய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

நடிகர் சூர்யா அவரது மனைவி ஜோதிகா, அப்பா சிவகுமார், அம்மா மற்றும் குழந்தைகள் உடன் சமீபத்தில் கீழடி அகழ்வாராய்ச்சி அருங்காட்சியகத்திற்கு வருகை புரிந்தார். அவர்களுடன் அமைச்சர் சு. வெங்கடேசனும் சென்றிருந்தார். இந்நிலையில் நடிகர் சூர்யா அந்தப் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

“பெருமிதம்!!! வைகை நாகரீகம் தொன்மையும் தொடர்ச்சியும் தமிழ் நாகரிகத்தின் தனிச்சிறப்பு என்பதை ‘கீழடி’ உணர்த்துகிறது. 2600 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் வாழ்வியலை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்போம்..

suriya
suriya

தமிழரின் வைகை நாகரிகத்திற்கு இது ஒரு தொடக்கமே.. அகழ்வாராய்ச்சியின் மூலம் புதிய வரலாறு எழுதப்படும்.. அழகியல் உணர்வோடு அருங்காட்சியகம் அமைத்து, கீழடி, தமிழரின் தாய்மடி என்பதை உலகறிய செய்த தமிழ்நாடு அரசுக்கு நன்றிகள்.. குழந்தைகளுடன் அனைவரும் வருக!” என்று தெரிவித்துள்ளார். 

MUST READ