Homeசெய்திகள்சினிமாஎன் வாழ்நாள் கனவு இது... மோடியை நேரில் சந்தித்த உற்சாகத்தில் மலையாள நடிகர்!

என் வாழ்நாள் கனவு இது… மோடியை நேரில் சந்தித்த உற்சாகத்தில் மலையாள நடிகர்!

-

- Advertisement -

மலையாள நடிகர் உன்னி முகுந்தன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது தனது வாழ்நாள் கனவு நிறைவேறியதாக தெரிவித்துள்ளார்.

மலையாளத்தில் பிரபல நடிகராக வலம் வருபவர் உன்னி முகுந்தன். மலையாளம் தவிர்த்து மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். அவர் சமீபத்தில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்துள்ளார்.

இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர்,

“எனது அக்கவுண்டில் இருந்து வெளியான பதிவுகளில் இந்த பதிவுதான் மிகவும் சரபவெடியானது. 14 வயது சிறுவனாக உங்களை தூரத்தில் இருந்து பார்த்தேன். தற்போது இறுதியாக உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த தருணத்தில் இருந்து நான் இன்னும் மீளவில்லை. உங்களை சந்தித்து உங்களுடன் குஜராத்தி மொழியில் பேச வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு.

அது தற்போது நிறைவேறி இருக்கிறது. அருமையான அனுபவமாக இருந்தது. உங்களின் 45 நிமிட நேரம் எனது வாழ்வின் சிறந்த 45 மணி நேரமாக மாறி உள்ளது. நீங்கள் என்னிடம் கூறிய வார்த்தையை நான் எப்போதும் மறக்க மாட்டேன். அதை என் வாழ்வில் ஒவ்வொரு முறையும் சாத்தியப்படுத்தி அதன்படி செயல்படுவேன்” என்று தெரிவித்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 

MUST READ