கலைஞர் நினைவிடத்தில் நடிகர் வடிவேலு கருணாநிதியுடன் பேசியுள்ளார்.நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவருடைய நகைச்சுவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வடிவேலுவை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அதைத் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாகவும் களமிறங்கினார் வடிவேலு. இருப்பினும் சில காலங்கள் சினிமா வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்க வடிவேலுவின் மார்க்கெட் குறைய தொடங்கியது. ஆனால் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவை வித்தியாசமான பரிமாணத்தில் காண முடிந்தது. இப்படத்தில் வடிவேலு மாமன்னாக நடித்து பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளையும் பெற்றார். அதை தொடர்ந்து மேலும் ஒரு படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் மெரினாவில் புனரமைக்கப்பட்ட கலைஞர் நினைவிடத்திற்கு வடிவேலு சென்றுள்ளார். கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய வடிவேலு, பின் அங்குள்ள அருங்காட்சியகத்திற்கு சென்றார் . அப்போது ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் மறைந்த கலைஞர் கருணாநிதியிடம் உரையாடினார் வடிவேலு. நாற்காலியில் அமர்ந்திருந்த கலைஞருடன் சோஃபாவில் அமர்ந்தபடி வடிவேலு, கருணாநிதியை கைகூப்பி கும்பிட்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் உரையாடினார். இது சம்பந்தமான வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.