நடிகர் வடிவேலு ஒரு காலத்தில் நகைச்சுவை நடிகராக அனைத்து ரசிகர்களையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர். இப்போதும் கூட காமெடி என்றாலே வடிவேலு தான் நினைவுக்கு வருவார். அந்த வகையில் இவருடைய காமெடிகள் தனி ரகமாக இருக்கும். ஆனால் ஒரு சில காரணங்களால் வடிவேலுவுக்கு சினிமாவில் மார்க்கெட் குறைந்த நிலையில் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் கடந்த ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்து பெயர் பெற்றார். இருப்பினும் வடிவேலு அடுத்தடுத்த படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவர் சின்னத்திரைக்கு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
அதாவது விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி அனைத்து ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று ஸ்ட்ரஸ் பஸ்டராக விளங்கியது. அந்த நிகழ்ச்சியை போல தற்போது சன் டிவியில் புதிய நிகழ்ச்சி ஒன்று தொடங்க உள்ளது. அதன்படி அந்த நிகழ்ச்சிக்கு டாப் குக்கு டூப் குக்கு இன்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தற்போது கிடைத்த தகவலின்படி நடிகர் வடிவேலு இந்த நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்துகொள்ள இருக்கிறாராம். ஏற்கனவே இந்த நிகழ்ச்சியின் வெளியான நிலையில் விரைவில் வடிவேலு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.