Homeசெய்திகள்சினிமா'மகாராஜா' பட இயக்குனரை நேரில் சந்தித்து பாராட்டிய விஜய்!

‘மகாராஜா’ பட இயக்குனரை நேரில் சந்தித்து பாராட்டிய விஜய்!

-

நடிகர் விஜய், மகாராஜா பட இயக்குனரை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார்.'மகாராஜா' பட இயக்குனரை நேரில் சந்தித்து பாராட்டிய விஜய்!கடந்த ஜூன் 14ஆம் தேதி விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மகாராஜா. இந்த படத்தை குரங்கு பொம்மை படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நித்திலன் சாமிநாதன் இயக்கியிருந்தார். ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அஜனீஸ் லோக்நாத் படத்திற்கு இசையமைத்திருந்தார். தினேஷ் புருஷோத்தமன் படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். 'மகாராஜா' பட இயக்குனரை நேரில் சந்தித்து பாராட்டிய விஜய்!இதில் விஜய் சேதுபதியுடன் இணைந்து மம்தா மோகன் தாஸ், நட்டி நட்ராஜ், அனுராக் காஷ்யப், சிங்கம் புலி, அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஆக்சன் திரில்லர் கதை களத்தில் உருவாகி இருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. மேலும் இந்த படம் பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளையும் பெற்று வருகிறது. 'மகாராஜா' பட இயக்குனரை நேரில் சந்தித்து பாராட்டிய விஜய்!அந்த வகையில் 25 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றி நடை போட்ட மகாராஜா திரைப்படம் சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாகி ட்ரெண்டிங் நம்பர் 1 ஆக இருந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய், மகாராஜா படத்தின் இயக்குனர் நித்திலன் சாமிநாதனை நேரில் சந்தித்து அவரை பாராட்டியுள்ளார். இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் படக்குழுவினரையும் வாழ்த்தியுள்ளார் விஜய்.

MUST READ