Homeசெய்திகள்சினிமாசாய்பாபா கோவிலில் தரிசனம் செய்த நடிகர் விஜய்!

சாய்பாபா கோவிலில் தரிசனம் செய்த நடிகர் விஜய்!

-

நடிகர் விஜய் தற்போது THE GREATEST OF ALL TIME (கோட்) திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. யுவன் சங்கர் ராஜா இதற்கு இசை அமைக்கிறார். சாய்பாபா கோவிலில் தரிசனம் செய்த நடிகர் விஜய்!இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னை, திருவனந்தபுரம், ரஷ்யா போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடிகர் விஜய் கோட் படப்பிடிப்புக்காக திருவனந்தபுரம் சென்றிருந்தார். அப்போது கேரள ரசிகர்கள் விஜய்யை மிகுந்த ஆரவாரத்துடன் உற்சாகத்துடனும் வரவேற்றனர். இதற்கிடையில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் தளபதி 69 திரைப்படம் தான் தனது கடைசி படம் என்றும் அதன் பிறகு முழு நேர அரசியல்வாதியாக தான் மாற இருப்பதாகவும் அறிவித்தார். எனவே தளபதி 69 படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.சாய்பாபா கோவிலில் தரிசனம் செய்த நடிகர் விஜய்! இறுதியாக இயக்குனர் எச் வினோத் தளபதி 69 படத்தை இயக்கப் போகிறார் என்று கிட்டத்தட்ட உறுதியான தகவல் வெளியாகி வருகிறது. மேலும் இந்த படத்தில் நடிகை சமந்தா, ஆலியா பட் போன்றோர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் விஜய் சாய்பாபா கோயிலில் தரிசனம் செய்துள்ளார். இது சம்பந்தமான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ