படங்களை இயக்க வேண்டும்… நடிகர் விஜய்சேதுபதியின் ஆசை…
- Advertisement -
திரைப்படங்களை இயக்க ஆசை என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவை தாண்டி இன்று பான் இந்தியா நடிகராக வலம்வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. தொடக்கத்தில் தமிழில் மட்டும் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி, தற்போது தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளிலும் சேதுபதி பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். பாலிவுட்டில் கடந்த ஆண்டு வெளியான ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார் விஜய் சேதுபதி.
ஜவான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அவர் இந்தியில் நடித்திருந்தார். கத்ரீனா கைஃப்க்கு ஜோடியாக மெரி கிறிஸ்துமஸ் என்ற திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் இந்தி, மற்றும் தமிழில் வெளியானது. இதைத் தொடர்ந்து தற்போது ஏஸ் என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். இதில் ருக்மணி, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும், விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமான மகாராஜா படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் ஜூன் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில், துபாயில் மகாராஜா பட புரமோசன் நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி, திரைப்படங்கள் இயக்க ஆசை என்று தெரிவித்துள்ளார். ஆனால், அது எப்போது நடக்கும் என தெரியாது, ஏனெனில் இயக்கம் என்பது மிகவும் பெரியது, அது தற்போதைக்கு முடியாது, ஆனால், வருங்காலத்தில் நிச்சயம் படம் இயக்குவேன் என்று தெரிவித்திருக்கிறார்.