Homeசெய்திகள்சினிமாநடிகர் விஜயகுமார் பேத்திக்கு திருமணம்... உச்ச நட்சத்திரங்களுக்கு அழைப்பு...

நடிகர் விஜயகுமார் பேத்திக்கு திருமணம்… உச்ச நட்சத்திரங்களுக்கு அழைப்பு…

-

- Advertisement -
பிரபல நடிகர் விஜயகுமாரின் பேத்தி திருமணம் விரைவில் நடைபெற உள்ள நிலையில், கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ் திரையுலகில் அன்று முதல் இன்று வரை பிரபலமான நடிகர் விஜயகுமார். தொடக்கத்தில் வில்லன் வேடத்தில் நடித்து வந்த அவர் தற்போது தந்தை, தாத்தா உள்பட குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார். சுமார் 400 திரைப்படங்களில் நடித்துள்ள இவருக்கு அருண்விஜய், கவிதா, அனிதா, வனிதா, பிரிதா, ஸ்ரீதேவி ஆகிய குழந்தைகள் உள்ளனர். சின்னத்திரையில் இவர் ‘தங்கம்’ தொடரில் ரம்யா கிருஷ்ணனுக்கு தந்தையாக நடித்துள்ளார். இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் துணைத்தலைவர் பதவியை வகித்தவர்.

இவரது மூத்தமகன் அருண்விஜயும், இவரும் இணைந்து பாண்டவர் பூமி , மலாய் மலாய் , மஞ்சா வேலு, குற்றம் 23 மற்றும் ஓ மை டாக் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளனர். விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா, இவர் சினிமாவில் நுழையாமல் மருத்துவராக உள்ளார். கோகுல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு, கோகுல், தியா என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இதில் தியா வெளிநாட்டில் மருத்துவம் படித்து வருகிறார். இவருக்கு தான் தற்போது திருமணம் முடிவாகி உள்ளது. திலன் என்பவருடன் திருமணம் நடைபெற உள்ளது.

கடந்த ஆண்டு இந்த ஜோடிக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக நடிகர் விஜயகுமார், அவரது மகள்கள் அனிதா, கவிதா மருமகள் ஆர்த்தி ஆகியோர் கோலிவுட் நட்சத்திரங்களை சந்தித்து அழைப்பிதழ் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் போயஸ் கார்டன் இல்லத்தில் உள்ள ரஜினிகாந்தை சந்தித்து திருமணத்திற்கு அழைத்துள்ளனர். தொடர்ந்து நடிகர் சூர்யா மற்றும் தனுஷ் குடும்பத்திற்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

MUST READ