Homeசெய்திகள்சினிமாநடிகர் விஜயின் "வாரிசுடு" தெலுங்கில் நாளை வெளியகிறது!

நடிகர் விஜயின் “வாரிசுடு” தெலுங்கில் நாளை வெளியகிறது!

-

தில்ராஜு தயாரிப்பில், வம்சி இயக்கத்தில், தமன் இசையில் நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,ஜெய சுதா உள்ளிட்டோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள  “வாரிசு” திரைப்படம் கடந்த புதன்கிழமை ஆந்திரா – தெலுங்கானா தவிர உலகம் முழுவதும் தமிழில் வெளியானது.

இந்நிலையில் வாரிசு திரைப்படம் “வாரிசுடு” என்ற பெயரில் தெலுங்கில் நாளை  வெளியாகிறது. இவை ஆந்திரா தெலுங்கானா உட்பட உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளர் இப்படத்தை தயாரித்துள்ளதால், ஆந்திரா தெலுங்கானாவில் 200 க்கும் மேற்பட்ட திரையரங்கில் “வாரிசுடு” தெலுங்கு வெர்சன் வெளியாக  உள்ளது என தகவல் வெளியாகி வந்தன.

MUST READ