Homeசெய்திகள்சினிமாஹீரோவாக அறிமுகமாகும் நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி!

ஹீரோவாக அறிமுகமாகும் நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி!

-

விஷ்ணு விஷால் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இவரின் முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்து, அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் குவித்தது. மேலும் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதே சமயம் கடந்த 2024 பிப்ரவரி 9ம் தேதி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருந்த லால் சலாம் திரைப்படத்திலும் விஷ்ணு விஷால் நடித்திருந்தார். இப்படமும் ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது.ஹீரோவாக அறிமுகமாகும் நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி! இந்நிலையில் விஷ்ணு விஷால் தனது தம்பி ருத்ரா என்பவரை தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார். ருத்ரா நடிக்கும் புதிய படத்தை அறிமுக இயக்குனர் கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்குகிறார். இந்த படத்திற்கு ஓஹோ எந்தன் பேபி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தர்புகா சிவா படத்திற்கு இசையமைக்கிறார். அதே சமயம் இந்த படத்தை விஷ்ணு விஷால், ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் டி கம்பெனி ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹீரோவாக அறிமுகமாகும் நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி!தற்போது இந்த படம் சம்பந்தமான அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் படத்தின் மற்ற அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஷ்ணு விஷால் தற்போது பிசியான நடிகராக வலம் வருவதைப் போல அவரது தம்பியும் சினிமாவில் தனக்கான முத்திரையை பதிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

MUST READ